| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2797 | திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (“நங்கண்ணன் கண்ணல்லதில்லையோர்கண்ணே”— என்றருளிச் செய்த ஆழ்வாரை நோக்கிச்சிலர் ’இப்படிச் சொல்லலாமோ.? பிரமன் சிவன் முதலானாரும் ஈச்வரர்கள் என்று காட்டுகின்ற பிரமாணங்கள் இல்லையோ? என்ன; அவர்களது சரித்திரங்களை ஆராய்ந்துபார்த்தால் அவர்கள் ஈச்வரர்களாகத் தகுதியில்லை; ஆபத்து வந்த காலத்திலே அவர்களைக் காத்தருளினவனாக ப்ரஸித்தி பெற்ற எம்பெருமானே ஈச்வரன் என்று நிலைநாட்டுகிறாரிதில். *வேதாபஹார குருபாதக * இத்யாதி ஸ்தோத்ர ரத்த ஸ்ரீஸிக்திக்கு இப்பாசுரம் மூலம்.) 2 | ஏ பாவம் பரமே யேழு லகும் ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார் மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய் கோபால கோளரி யேறன்றியே –2-2-2 | மா பாவம் விட,maa paavam vida - மிகப் பெரிதான (பிரமஹந்தி) பாபமானது விட்டு நீங்கும்படி அரற்கு,ararku - சிவபிரானுக்கு பிச்சை பெய்,picchai pei - பிக்ஷையிட்ட கோபாலன்,gopaalan - கோபாலனென்கிற கோள் அரி ஏறு அன்றி,kol ari eru andri - வலிமை தாங்கிய ஆண்சிங்கமல்லது (வேறொருவர்) ஏழ் உலகும்,ez ulakum - ஏழுலகங்களையும் ஈ பாவம் செய்து,ee paavam seythu - பாவம் தொலைந்ததாகச் செய்து அருளால்,arulaal - கிருபையினாலே அளிப்பார்ஆர்,alippaarAar - காப்பவருண்டோ? ஏ பாவம்,e paavam - ஐயோ? பரமே,parame - எம்பெருமானது ஏற்றத்தைச் சொல்லிமுடித்தல் நம்மாலாகுமோ? |