| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2806 | திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (இத் திருவாய் மொழியைக் கருத்துடனே கற்று வல்லார்க்கு, எம்பெருமான் ஈச்வரனல்லன்’ என்று புத்தி பண்ணுதல். ‘இதர தேவதைகள் ஈச்வரர்கள்’ என்று புத்தி பண்ணதல் ஆகிற அவத்யமொன்றும் உண்டாகமாட்டாதென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | ஏத்த வேழுலகும் கொண்ட கோலக் கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல் வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன் ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11 | ஏத்த,yetha - (அனைவரும் துதிக்க ஏழ் உலகும் கொண்ட,Ezhu ulagum konda - எல்லா வுலகங்களையு மளந்து கொண்ட கோலம் கூத்தனை,Kolam kootthanai - அழகிய கூத்தனான எம்பெருமானைக் குறித்து குருகூர்சடகோபன் சொல்,kurukoor sadagopan sol - ஆழ்வார் அருளிச் செய்த வாய்த்த,Vaaytha - உலகுக்கு மஹா பாக்யமாகக் கிடைத்த ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தில் இவை பத்து,Ivai pattu - இப் பத்துப் பாசுரங்களையும் உடன்,Udan - அர்தத்தோடு (கற்று) ஏத்த வல்லவர்க்கு,yetha vallavarkku - ஸ்துதி சொல்ல வல்லவர்கட்கு ஓர் ஊனம் இல்லை,or oonam illai - ஒரு குறையுமில்லையாகும் |