திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2807 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2807திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (ஸர்வேச்வரனைக் கொண்டாடப் பிறந்த ஆழ்வார் தம் திருவுள்ளத்தைக் கொண்டாடடுகிறாரிப்பாட்டில். ஏனெனில் கைங்காரியச் செல்வத்திற்கு இட்டுப் பிறந்து வைத்து நெடுநாளாக இழந்து கிடந்த நமக்கு இந் நெஞ்சினாலன்றோ இன்று பேறுவாய்த்தது என்ற உவப்பினால். ராஜ்யத்தை இழந்து கிடந்த வொரு ராஜகுமாரனை ஒருவன் ராஜ்யத்திலே புகுவித்தால் ‘இவனாலேயன்றோ நாம் இப்பேறு பெற்றது’ என்று அவனைக் கொண்டாடுவர்களன்றோ, அதுபோல.) 1
ஊனில் வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப் பெற்று வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே–2-3-1
பதவுரை Show / Hide
ஊனில்,Oonil - மாம்ஸ ரூபமான சரீரரத்தில்
வாழ்,Vaazh - வாழ்கின்ற
உயிரே,Uyire - நெஞ்சமே!
நல்லை போ,Nallai po - நீ நல்லவன் காண்; (ஏனென்றால்)
உன்னை பெற்று,Unnai petru - உன்னை ஸ்வாதீனமாகப் பெற்றதனால்,
வான் உளார்பெருமான்,Vaan ulaarperumaan - நித்யஸூரிகட்குத் தலைவனும்
மதுசூதன்,Madhusoodhan - மதுவென்னு மசுரனைக் கொன்றவனும்
என் அம்மான் தானும்,En ammaan thaanum - எம்பெருமானாகிய அவனும்
யானும்,Yaanum - (அவனுக்கு அடிமைப்பட்ட) நானும்
தன் உள்ளே,Than ullae - தனக்குள்ளே
எல்லாம்,Ellaam - எல்லா வகை யினிமையுமாம்படி
தேனும்,Thenum - தேனும் தேனும்
பாலும்,Paalum - பாலும் பாலும்
நெய்யும்,Neyyum - நெய்யும் நெய்யும்
கன்னலும்,Kannalum - அக்காரமும்
அமுதும்,Amudhum - அம்ருதமும் அம்ருதமும்
ஒத்து,Othu - ஒன்று சேர்ந்தாற் போன்று
கலந்தொழிந்தோம்,Kalanthozhindhom - கலந்து விட்டோம்