திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2809 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2809திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (தம் விஷயத்தில் எம்பெருமான் செய்தருளின நன்மைகளைப் பேசுகிறாரிதில்.) 3
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் அறியாமைக் குறளாய் நிலம் மா வலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவி யுள் கலந்தே–2-3-3
பதவுரை Show / Hide
அறியாமை,Ariyaamai - (தனது உண்மையை பிறர்) அறியாதபடி
குறள் ஆய்,Kurral aay - வாமன மூர்த்தியாகி
மாவலி,Maavali - ‘மகாபலியே!
மூ அடி நிலம் என்று,Moo adi nilam endru - மூன்றடி நிலம் (வேணும்) என்று சொல்லி
அறியாமை,Ariyaamai - (கபட குணத்தை பிறர்) என்று சொல்லி
வஞ்சித்தாய்,Vanjithaay - வஞ்சித்து நிலத்தைக் கவர்ந்தவனே!
எனது ஆவி உள் கலந்து,Enadhu aavi ull kalanthu - எனது நெஞ்சினுள்ளே சேர்ந்து
அறியா மா மாயத்து அடியேனை,Ariya maa maayathu adiyenai - அறியாமையை விளைவிப்பதான ஸம்ஸாரத்திலாழ்ந்து கிடந்த என்னை
அறியா காலத்துள்ளே,Ariya kaalathulle - தொண்டு படுதற்கு அறியா அந்தக் காலத்திலே
அடிமைக் கண்,Adimai kan - தொண்டு செய்யும் தொழிலிலே
அன்பு,Anbu - ஆவலை
செய்வித்து வைத்தாய்,Seyvithu vaithaay - உண்டாக்கி வைத்தாய்
ஆல்,Aal - ஆச்சர்யம்