திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2810 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2810திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (உலகத்தில் ஒருவர் ஒரு உபகாரஞ்செய்தால் உபகாரம் பெற்றவர் பிரதியுபகாரஞ் செய்வதென்று ஒரு முறைமை யுண்டாதலால் அதன் படியே ஆழ்வாரும் எம்பெருமானுக்குக் கைம்மாறு செய்யக் கருதி ஆத்ம ஸமாப்பணமாகிற கைம்மாறு செய்ததாக முந்துறக் கூறி, உடனே ஆராய்ந்து பார்த்து, ஆத்ம வஸ்து நம்முடைய தாகிலன்றோ நாம் கொடுத்ததாக ஆகும் நாமும் நம்முடைமையுமெல்லாம் அவலுடைய சரக்காகவே யிருக்கும் போது நாம் கொடுத்ததாகக் கூறுவது பிசகு என்று அநுதபித்து ‘உன் வஸ்துவை நீயே கைப் பற்றிக் கொண்டா யத்தனை யல்லது நான் ஸமர்ப்பித்ததாகச் சொல்லுவது உசிதமன்று’ என்று தலைக் கட்டுகிறார்.) 4
எனது ஆவியுள் புகுந்த பெரு நல் உதவிக் கைம்மாறு என தாவி தந்தொழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே? என தாவி ஆவியும் நீ, பொழில் ஏழும் உண்ட எந்தாய்! எனது ஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டாக்கினையே–2-3-4
பதவுரை Show / Hide
பொழில் ஏழும் உண்ட,Pozhil ezhum unda - (பிரளயத்தில்) ஏழுலகங்களையும் வயிற்றில் வைத்து நோக்கின
எந்தாய்,Endhaay - எம்பெருமானே!
எனது ஆவிஉள் கலந்த,Enadhu aavi ull kalandha - என் ஆத்மாவுக்குள்ளே நீ ஒரு தன்மையாய்க் கலக்கப் பெற்ற
பெரு நல் உதவி,Peru nal udhavi - நல்ல மஹோபகாரத்திற்கு
கைம்மாறு,Kaimmaaru - பிரதியுபகாரமாக
எனது ஆவி,Enadhu aavi - என் ஆத்மாவை
தந்தொழிந்தேன்,Thandhozhindhaen - உனக்கு அர்ப்பணஞ் செய்து விட்டேன்
இனி,Ini - இனி மேல்
மீள்வது என்பது உண்டே,Meelvadhu enbadhu unde - கொடுத்ததை மீட்டுப் பெற்றுக் கொள்வதென்பது உண்டோ? இல்லை;
எனது ஆவியும்,Enadhu aaviyum - எனது ஆத்மாவுக்கும்
ஆவி,Aavi - ஆத்மாவாயிருப்பவன்
நீ,Nee - நீ (ஆதலால்)
எனது ஆவி? யார்,Enadhu aavi? Yaar - என் ஆத்மா யார்?
யான் ஆர்,Yaan aar - யான் ஆர்
தந்த நீ,Thandha nee - படைத்துக் கொடுத்த நீ தானே
கொண்டாக்கினை,Kondakkinai - கவர்ந்து கொண்டவனானாய்.