திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2811 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2811திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (பிரளய வெள்ளத்திலே மூழ்க நின்ற ஜகத்தை யெடுத்தருளினாப் போலே ஸம்ஸார ஸாகரத்திலே மூழ்கிக் கிடக்கிற என்னை உன் திருவடிகளில் உறவையறிவித்து எடுத்தருளுகையாலே இனி யுன் திருவடிகளைப் பெற்றேனென்று மகிழ்ச்சி தோற்றப் பேசுகிறார்.) 5
இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்! கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே! தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5
பதவுரை Show / Hide
யார்,Yaar - எப்படிப் பட்டவர்களுடையவும்
ஞானங்களால்,Gnaanangalal - ஞான விசேஷங்களாலும்
எடுக்கல் எழாத,Edugal ezhadha - க்ரஹிக்கப் பார்த்தாலும் க்;ரஹிக்க முடியாத
எந்தாய்,Endhaay - எம்பெருமானே !
கனிவார்,Kanivaar - (உன் பக்கலில்) மனங்கனிந்தவர்களுக்கு
வீடு இன்பமே,Veedu inbamae - மோக்ஷ ஆனந்தமே வடிவெடுத்தது போலிருப்பவனே
கடல் படா,Kadal padaa - உப்புக் கடலிலுண்டாகாத
என் அமுதே,En amudhe - எனக்கு போக்கியமான அம்ருதமே!
தனியேன்,Thaniyaen - அத்விதீய பக்தனான என்னுடைய
வாழ்,Vaazh - வாழ்ச்சிக்கு
முதலே,Mudhale - முதற் காரணமே!
பொழில் ஏழும்,Pozhil ezhum - ஏழுலகங்களையும்
ஏனம் ஒன்று ஆய்,Enam ondru aay - ஒப்பற்ற வராஹ ரூபியாகி
நுனி ஆர்,Nuni aar - கூர்மை மிகுந்த
கோட்டில்,Kotil - கோரப்பல்லிலே
வைத்தாய்,Vaithaay - வைத்தெடுத்தவனே!
இனி,Ini - இது முதலாக
உன பாதம்,Un paadham - உனது திருவடிகளை
சேர்ந்தேனே,Saerndhaenae - அடியேன் பிரியா திருப்பவனே.