திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2814 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2814திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (நெடுங்காலம் வருந்தி ஸாதிக்க வேண்டிய புருஷர்ர்த்தத்தை இந்த ஜன்மந் தன்னிலே அற்பகாலத்தில் எளிதாகப் பெற்றேனென்று பகவத் கடாக்ஷத்தின் பெருமையைப் பேசுகிறார்.) 8
குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும் கிறிக் கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான் உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித் துண்ணும் அம்மான் பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே–2-3-8
பதவுரை Show / Hide
உறி கொண்ட,Uri konda - உறிகளிலே சேமித்து வைத்த
வெண்ணெய்,Vennai - வெண்ணெயையும்
பால்,Paal - பாலையும்
ஒளித்து உண்ணும்,Ozhithu unnum - மறைந்திருந்து அமுது செய்த
அம்மான் பின்,Ammaan pin - எம்பெருமான் பின்னே
நெறிக் கொண்ட,Nerik konda - அவன் போன வழியே போகிற
நெஞ்சன் ஆய்,Nenjan aay - மனத்தை யுடையேனாய்
பிறவி துயா,Piravi thuya - ஸம்ஸாரத் தொல்லைகளை
கடிந்து,Kadindhu - நிராகரித்து
குறிக்கொள் ஞானங்களால்,Kuri kol gnaanangalal - யம நியமாதிகளாலே கொள்ளப் படுவதான ஞானங்களால் -விசேஷங்களாலே (உபாஸநாதிகளாலே)
எனை ஊழி,Enai oozhi - அநேக கல்ப காலங்களில்
செய்,Sey - செய்யப்பட வேண்டியதான
தவமும்,Thavamum - பக்தி யோகமாகிற தவத்தின் பயனை
கிறிக் கொண்டு,Kirik kondru - (பகவத் க்ருபையாகிற) உபாயத்தைக் கொண்டு
இப் பிறப்பே,Ippirappe - இந்தப் பிறவியில் தானே
சில நாளில்,Sila naalil - சில நாட்களில்
யான்,Yaan - அகிஞ்சநனாகிய அடியேன்
எய்தினன்,Eydinan - அடைந்தேன்.