திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2815 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2815திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (பரம பதத்திலே ப்ராப்தமாகக் கூடிய பகவத் குணாநுபவத்தை நான் இந் நிலத்திலேயே பெற்றேனென்று களித்துப் பேசுகிறாரிதில்.) 9
கடிவார் தண்ணந்துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான் படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர்ச் செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே–2-3-9
பதவுரை Show / Hide
கடி வார்,Kadi vaar - பரிமளம் மிக்க
தண் அம் துழாய்,Than am thuzhaay - குளிர்ந்தழகிய திருத் துழாய் மாலையை யுடையனான
கண்ணன்,Kannan - ஸ்ரீ க்ருஷ்ணனாய்
விண்ணவர் பெருமான்,Vinnavar perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய்
வானம்,Vaanam - பரம பதத்திலும்
படி இறந்த,Padi irandha - ஒத்தார் இல்லாதவனான
பரமன்,Paraman - பரம புருஷனாய்
பவித்திரன்,Pavithiran - பரிசுத்தனான எம்பெருமானுடைய
சீர்,Seer - திருக் குணங்களிலே
செடி ஆர்நோய்கள் கெட,Chedi aarnoygal keda - தூறு நெருங்கினாற்போலே நெருங்கி யிருக்கின்ற ஸம்ஸார வியாதிகள் தொலையும்படி
படிந்து,Padindhu - கிட்டி
குடைந்து ஆடி,Kudaindhu aadi - அவகாஹத்து
அடியேன்,Adiyaen - தாஸனாகிய நான்
வாய் மடுத்து பருகி,Vaai maduthu parugi - வாயாரப் பருகி
களித்தேன்,Kalithaen - களிக்கப் பெற்றேன்.