| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2817 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (ஒவ்வொரு பதிகத்திலும் ஈற்றுப் பாசுரத்தில் பயனுரைத்து வருகின்ற ஆழ்வார் இப் பதிகத்திற்குப் பயன் கூறாது, இத்திருவாய்மொழி, பாகவதர் பெருந்திரளாக இருந்து அநுபவிக்கத்தக்கது என்று சொல்லித் தலைக்கட்டுகின்றார். இதற்கொரு பலன் எதிர்பார்க்கவேண்டா; பெரிய கோஷ்டியாக இருந்து இதனை அநுபவிப்பதுதானே ஸ்வயம் ப்ரோயஜனம் என்று தெரிவித்தவாறு. அன்றியே, இத்திருவாய்மொழியைக் கற்கப் பெறில் என்னைப் போல் தனியே யிருந்து துவளாமல் பாகவத கோஷ்டிகளுடன் கூடி அனுபவிக்கும்படியான பெரும்பேறு பெறுவீர்கள் என்று இதனை இத்திருவாய்மொழி கற்கையின் பயனாகவே அருளிச்செய்தாரென்றுங் கொள்ளலாம். ஆடுமின் என்றது ஆடப் பெறுவீர்களாக என்றபடி.) 11 | குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக் குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக் குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11 | அடியீர்,Adiyir - பக்தர்களே! குழாம் கொள்,Kulam kol - கூட்டங்கூட்டமான சேனைகளைக் கொண்ட பேர்,Per - மிக்க பெருமை பொருந்திய அரக்கன்,Arakkan - ராக்ஷஸ ராஜனாகிய இராவணனுடைய குலம்,Kulam - குடும்பம் வீய,Veeya - தொலையும்படி முனிந்தவனை,Munindhavanai - சீறி யருளின பெருமான் விஷயமாக குழாம் கொள் தென்குருகூர்,Kulam kol thenkurukoor - (ஸ்ரீவைஷ்ணவ) கோஷ்டிகளை யுடைத்தான திரு நகரிக்குத் தலைவரான சடகோபன்,Sadagopan - ஆழ்வார் தெரிந்து,Therindhu - ஆராய்ந்து உரைத்த,Uraitha - அருளிச் செய்த குழாம் கொள் ஆயிரத்துள்,Kulam kol aayiraththul - பாசுரங்களின் கூட்டம் நிரம்பிய இவ் வாயிரத்தினுள் இவை பத்தும்,Ivai pattum - இப் பத்துப் பாட்டையும் உடன்,Udan - பொருளுடனே பாடி,Paadi - பாடி குழாங்கள் ஆய்,Kulangaal aay - பெரிய கோஷ்டியாய் உடன் கூடி நின்று,Udan koodi nindru - ஒரு மிக்கக் கலந்திருந்த ஆடுமின்,Aadumin - கூத்தாடுங்கள். |