திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2821 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2821திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (மகளே! பதாறாதே எம்பெருமான்ப்ரணயிநிகளுக்குக் காரியம் செய்வது தவறமாட்டார்; ஜனகராஜன் திருமகளுக்காகத் காரியஞ் செய்தருளினாரென்பது வாஸ்தவமே. அப்பிராட்டி எத்தனை மாதம் தனிச் சிறையிலிருந்து துவண்டாள் தெரியுமோ? பத்துமாதம் பொறுத்தன்றோ அவளுக்கும் காட்சிதந்தது; ப்ராப்திகாலம் வர வேண்டாவோ? அ வளுக்குப் போலே உனக்கும் ஒருநாளிலே காட்சி தரத் தடையிராது; *சரைஸ் துஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந” மாம்நயேத் யதிகாகுத்ஸ்த; தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் என்று அப்பிராட்டி ஆறியிருந்தது போலவே நீயும் ஆறியிருப்பதே தகுதி; அவன் இலங்கை செற்றவன் என்பதையே நீ சொல்லிக்கொண்டிரு-என்று நான் (என் மகளைத்) தேற்றினேன்; அவளும் அப்படியே “இலங்கை செற்றவனே!” என்றே சொல்லிக் கொண்டு ஒருவாறு தரித்திருந்தவள் மீண்டும் கதறத் தொடங்கவிட்டாளென்கிறாள் திருத்தாய்.) 4
இலங்கை செற்றவனே யென்னும் பின்னும் வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக் கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4
பதவுரை Show / Hide
இவள்,Ival - இப்பராங்குசநாயகி.
இலங்கை செற்றவனே என்னும்,Ilangai setravane ennum - (என்னோடொத்த ஒருத்திக்காக) லங்காபுரியை யழித்தவனே! என்கிறாள்
பின்னும்,Pinnum - அதற்குமேலும்
வலம் கொள்புற் உயர்த்தாய் என்னும்,Valam kolpur uyarthai ennum - வலிமைமிக்க கருடனைக் கொடியாகக் கொண்டவனே! என்கிறாள்.
உள்ளம் மலங்க,Ullam malang - மனம் சுழலும்படி
வெவ்வுயிர்க்கும்,Vevviyirkkum - உஷ்ணமாக மூச்சுவிடுகின்றாள்;
கண் நீர்,Kan neer - கண்ணீரானது
மிக,Miga - அதிகமானவாறே
கலங்கி,Kalanggi - (அதனால்) அறிவுகலங்கப் பெற்று
நின்று,Nindru - ஸ்தம்பித்து நின்று
கைதொழும்,Kaidhozhum - அஞ்ஜலிபண்ணா நின்றாள்