திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2824 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2824திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (தன் மகளுடைய வருத்தங்களையும், அவன் தன் குணங்களாலே இவளை வஞ்சித்தபடியையும் தாய் சொல்லுகிறாள்.) 7
உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என் வள்ளலே கண்ணனே என்னும் பின்னும் வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என் கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7
பதவுரை Show / Hide
என் கள்வி,En kalvi - என்னிடத்திலும கூட உண்மையை மரைப்பவளான இப்பெண்பிள்ளைதான் அகப்படும்படி அவன் செய்த
தான்பட்ட,Thaanpatta - தான் அகப்படும்படி அவன் செய்த
வஞ்சனை,Vanjanaai - வஞ்சகம் (பலித்தபடி என்னென்னில்)
உள்ளுள் ஆவி,Ullulle aavi - உள்ளுயிரானது
உலர்ந்து உலர்ந்து,Ularndhu ularndhu - மிகவுமுலர்ந்து
என வள்ளலே,En vallale - என்னுடைய பெருங்கொடையாளனே!
கண்ணனே,Kannane - க்ருஷ்ணனே!’
என்னும்,Ennum - என்கிறாள்;
பின்னும்,Pinnum - அதற்கு மேலே
வெள்ளம் நீர்,Vellam neer - (திருப்பாற்) கடலிலே
கிடந்தாய்,Kidandhaay - கண்வளர்ந்தருளினவனே!
என்னும்,ennum - என்கிறாள்.