| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2831 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (பிராட்டி பிரமன்சிவன் முதலானார் மாத்திர மன்றியே ஸகலலோகங்களும் தன்னைப்பற்றி ஸத்தை பெறும்படி யிருக்கிற எம்பெருமான், இவ்வுலகங்களெல்லாம் தன்னை யொழிந்தால் படும்பாட்டைத் தான் என்னைப் பிரிந்து பட்டு என்னோட கலக்கையாலே மிகவும் புஷ்கலனானான் என்கிறாரிடத்தில்) 3 | என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம் மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம் மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3 | என்னுள் கலந்தவன்,Ennul kalanthavan - என்னுள் கலந்த வனாகி மின்னும்,Minnum - விளங்குகின்ற சுடர்மலைக்கு,Sudar malai kku - ஒளிபொருந்திய மலை போன்ற பெருமானுக்கு செம் கனி வாய,Sem kani vaai - சிவந்து கனிந்த திருவாய் செம் கமலம்,Sem kamalam - செந்தாமரை மலர் போன்றது; கண் பாதம் கை,Kan paadham kai - திருக்கண்களும் திருவடிகளும் திருக்கைகளும் கமலம்,Kamalam - செந்தாமரை மலரே; மன்னு முழு ஏழ் உலகும்,Mannu muzhu ezhu ulagum - நிலைபெற்ற ஸகல லோகங்களும் வயிற்றின் உள,Vayitrin ul - (அவனது) திருவயிற்றி லடங்கியுள்ளள தன்னுள்,Thannul - அவன்றனக்குள்ளே கலவாதது,Kalavaadhadhu - சேராதது எப்பொருளும் தான் இல்லை,Epporulum thaann illai - யாதொரு பொருளுமேயில்லை |