திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2834 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2834திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (ஆழ்வார் தம்மோடே எம்பெருமான் கலக்கும்போது ஒரு வடிவோடே கலந்து த்ருப்தி பெற மாட்டாதே பலவடிவுகள் கொண்டு கலந்து அநுபவிக்கும் படியை அருளிச்செய்கிறார்.) 6
பலபலவே யாபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம் பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6
பதவுரை Show / Hide
பாம்பு அணை மேலாற்கு,Paambu anai melaarku - ஆதிசேஷனைப் பள்ளியாகக் கொண்டிருக்கும் பெருமானுக்கு
பண்பு எண்ணில்,Panbu ennil - (என்னோடு கலவியாலுண்டான அழகை) நிரூபித்துப் பார்க்குமிடத்து,
ஆபரணம்,Abaranam - திருவாபரணங்கள்
பலபல,Palapala - மிகப் பலவாயிருக்கும்
சோதி வடிவு,Sodi vadivu - ஒளியுருவான திருமேனி
பல பல,Pala pala - மிகப் பலவாயிருக்கும்
கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம்,Kandu undu kettu urru mondhu inbam - பார்த்தும் உண்டும் கேட்டும் ஸ்பர்சித்தும் மோந்தும் (உண்டாகிற) சுகங்களும்
பல பல,Pala pala - மிகப்பலவாயிருக்கும்!
ஞானமும்,Gnaanamum - ஞானங்களும்
பல பல,Pala pala - மிக மிகவாம்.