திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2835 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (எம்பெருமான் சில திவ்விய சேஷ்டிதங்களைத் தமக்குக் காட்டியருளக் கண்டு அநுபவித்துப் பேசுகிறார்.) 7 | பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7 | பதவுரை Show / Hideபால் கடலுள்,Pal kadalul - திருப்பாற் கடலிலே பாம்பு அணை மேல்,Paambu anai mel - சேஷசயனத்தின் மீது பள்ளி அமர்ந்ததுவும்,Palli amarthaduvum - கண்வளர்தல் பொருந்தினதும். காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய்,Kaambu anai thol pinnai kku aay - மூங்கில் போன்ற தோள் களையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழ் ஏறு,Eezh er - ஏழு ரிஷபங்களை உடன்,Udan - ஏக காலத்தில் செற்றதுவும்,Settraduvum - தொலைத்ததும். தேன் பணைய சோலை,Then panaiya solai - தேனையும் கிளைகளையுமுடைய சோலையாகத் தழைத்த ஏழ் மராமரம்,Eezh maramaram - ஸப்த ஸால வ்ருஸங்களையும் எய்ததவும்,Eythadavum - துளை படுத்தினதும் பூ பிணைய,Poo pinaiya - அழகிய தொடுத்தலையுடைத்தான தண்,Than - குளிர்ந்த துழாய்,Thuzhai - திருத்துழாய் மாலையணிந்த பொன்,Pon - பொன் மயமான முடி,Mudi - திரு வபிஷேகத்தையடையவனாயும் அம் போர்ஏறு,Am pooreru - அழகியவனாயும்-போர்க்குரிய இடபம் போன்றவனுமான எம்பெருமான் (செய்த செயல்களாம்.) |