திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2836 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2836திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (எம்பெருமான் பராத்பரனாயிருந்து வைத்து என்னுடைய தாழ்ச்சியைக் கணிசியாதே என்னோடே வந்து கலந்த பெருங்குணத்தை நான் பேசவல்லேனல்லேனென்கிறார்) 8
பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள் தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8
பதவுரை Show / Hide
பொன் முடி,Pon mudi - பொன் மயமான திருமுடியை யுடையனாய்
அம் போர்ஏற்றை,Am pooretray - அழகிய போரேறு போன்றவனாய்
எம்மானை,Emmaanai - எனக்கு நாதனாய்
நால் தட தோள்,Naal tada thol - நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனாய்
தன் முடிவு ஒன்றும் இல்லாத,Than mudivu ondrum illaadha - தன் பெருமைக்கு முடிவு ஒன்றுமில்லாதவனாய்
தண் துழாய் மாலையனை,Than thuzhai maalaiyanai - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையவனாய்
என் முடிவு காணாதே,En mudivu kaanaadhae - எனது தாழ்வைக் கணிசியாமல்
என் உள் கலந்தானை,En ul kalandhaanai - என்னோடு கலவி செய்தவனுமான பெருமானை
நான் சொல் முடிவு காணேன்,Naan sol mudivu kaanen - நான் சொல்லி முடிக்கும் வகையறிகின்றிலேன்!
என் சொல்வது,En solvadhu - என்னவென்று சொல்லலாம்!
சொல்லீர்,Solleer - நீங்களே சொல்லுங்கள்