| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2837 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (கீழ்ப்பாட்டில் “சொல்முடிவு காணேன் நான் சொல்லுவதென் சொல்லீரே” என்று தமக்கு எம்பெருமானைப் பேச முடியாமையாலே பேசவுந் தவிர்ந்த ஆழ்வார் பின்னையும் தம்முடைய நப்பாசையினால் ஸம்ஸாரிகளை யழைத்து என்னாயனான ஸர்வேச்வரனை எல்லாருங் கூடியாகிலும் ஒருவடிசொல்லுவோமே! என்கிறார்.) 9 | சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய் அல்லிமலர் விரையொத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9 | என் அம்மானை,En ammaanai - எனக்கு ஸ்வாமியாய் என் ஆவி ஆவி தனை,En aavi aavi thanai - என் ஆத்மாவுக்கும் ஆத்மாவாயிருப்பவனாய் எல்லை இல் சீர்,Ellai il seer - எல்லையற்ற குணங்களையுடைய என் கரு மாணிக்கம் சுடதை சொல்லீர்-,En karu manikam suthathai solleer - எனது நீலரத்னம் போன்ற வொளியுருவையுடையனான பெருமானை சொல்லுங்கள். நல்ல அமுதம்,Nalla amudham - நல்ல அம்ருதமாய் பெறற்கு அரிய வீடும் ஆய்,Perarku ariya veedum aay - எளிதாகப் பெறுவதற்கு முடியாத மோக்ஷ நிலத்திற்கும் தலைவனாய் அல்லி மலர் விரை ஒத்து,Alli malar virai otthu - தாமரைப் பூவிலுள்ள பரிமளம் போல் பரமபோக்யனாய் ஆண் அல்லன் பெண் அல்லன்,Aan allan penn allan - ஆணுருவ மல்லாதவனாய்ப் பெண்ணுருவமு மல்லாதவனாயிருக்கின்றனவன். |