திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 2840 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2840திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -2-6-1- இவர் நம்மை விடில் செய்வது என் -என்று அவன் அதி சங்கை பண்ண -அத்தை நிவர்த்திப்பிக்கிறார்.) 1
வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1
பதவுரை Show / Hide
வைகுந்தா,Vaikundha - பரமபத நாதனே
மணி வண்ணனே,Mani Vannane - நீல மணி போன்ற வடிவை யுடையவனே
என் பொல்லாத் திருக் குறளா,En Pollath Thiruk Kurala - என்னுடைய அனுபவத்திற்கு உரிய அழகிய வாமன மூர்த்தியே
என் உள் ,En Ul - என் மனதில்
மன்னி வைகும்,Manni Vaigum - நிலை பெற்று தங்கி இருப்பவனும்
வைகல் தோறும்,Vaigal Thorum - ஒவ்வொரு க்ஷணத்திலும்
அமுது ஆய ,Amuthu Aaya - அம்ருதமாயிருபவனும் மான
வான் ஏறே ,Vaan yere - நித்யஸூரி நாதனே!
செய்,Sei - செய்யப்பட்டு
குந்தா,Gundha - குறைபடாத
அரு தீமை ,Aru Theemai - போக்குதற்கரிய பாவங்களை
உன் அடியார்க்குத் தீர்த்து,Un Adiyarkuth Theerthu - உன் தொண்டர்கட்கு போக்கி
அசுரர்க்கு,Asurarkku - அஸுரப்ரக்ருதிகளுக்கு
தீமைகள்,Theemaigal - அந்த தீமைகளை
செய்,Sei - உண்டாக்குகின்ற
குந்தா,Gundha - பரிசுத்தனே
உன்னை,Unnai - எப்படிப்பதை உன்னை
நான்,Naan - அடியேன்
சிக்கென,Sikken - உறுதியாக
பிடித்தேன்,Pidithen - பிடித்துக்கொண்டவன்(என்று)
கொள்,Kol - திருவுள்ளம் பற்ற வேணும்