திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 2841 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2841திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (எம்பெருமான் ஆழ்வார்தம்மோடே கலந்து மிக்க ஒளிபெற்றானாய்க் கொண்டு வேறு போக்கிடமற்றுத் தம் பக்கலிலேயே படுகாடு கிடச்சிறபடியைப் பேசுகிறார்.) 2
சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின் மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2
பதவுரை Show / Hide
சிறிது ஓர்இடமும்,Siridhu Ooridamum - மிக அற்பமான இடமும்
புறப்படா,Purappada - வெளிப்பட்டிராமல் (எல்லாம் உள்ளே யடங்கும்படி)
உலகுகள்,Ulakul - உலகங்களை
தன் உள்,Than Ul - தனக்குள்ளே
ஒக்க,Okka - சமமாக
விழுங்கி,Vilungi - அமுது செய்து (அந்தத் திருக்கோலத்துடனே)
சிக்கென,Sikkena - உறுதியாக
புகுந்தான்,Pugundhaan - என்னுள் பிரவேசித்தான்
புகுந்ததன்பின்,Pugundhadhanpin - பிரவேசித்தபின்
மிக்க,Mikka - மிகுந்த
ஞானம் வெள்ளம்,Gnaanam Vellam - ஞானப் பிரவாஹமாகிற
சுடர்,Sudar - ஒளியுள்ள
விளக்கு ஆய்,Vilakku Aay - தீபமாகி
துளக்கு அற்று,Thulakku Attru - (நான் ஒருகால் விட்டுவிடுவேனோ என்கிற) ஸந்தேஹம் தீர்ந்து
அமுதம் ஆய்,Amudham Aay - அம்ருதமாகி
என்,En - எனக்கு விதேயனான
பைந் தாமரை கண்ணன்,Pain Thaamarai Kannan - அழகிய தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடைய பெருமான்
எங்கும்,Engum - எவ்விடத்திலும்
பக்கம் நோக்க அறியான்,Pakkam Nokka Ariyaan - திரும்பிப் பார்ப்பது மின்றியே யிராநின்றான்