| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2843 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) ( கீழ்ப்பாட்டில் நாம் நாம் என்று ஒரு தடவைக்கு இரு தடவையாகச் சொன்னது ஆழ்வார் தம்முடைய நைச்சியத்தை யெடுத்துக் காட்டினபடியாதலால், நைச்சியாநுஸந்தானம் பண்ணப் புகுந்தவிவர், நம்மை யொருகால் விட்டுவிடுவாரோ? என்று எம்பெருமான் அதிசங்சை கொள்ள, உன் வடிவழகை நிர்ஹேதுகமாக நீயே யென்னை அநுபவிப்பிக்க அநுபவித்து அதனாலே சிதிலனாயிருக்கின்ற நான், உன்னை விட ப்ரஸக்தியுண்டோ வென்கிறார்.) 4 | வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன் வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –2-6-4 | வள்ளலே,Vallale - உதாரனே! மது சூதனா,Madhusudhana - மதுஸூதநனே! என் மரதக மலையே,En Marathaga Malaiye - என்னுடைய அநுபவத்திற்குரிய மரதகமலை போன்றவனே! உனை நினைந்து,Unai Ninaithu - உன்னை யநுஸந்தித்து எள்கல்,Elgal - ஈடுபட்டிருக்கும்படியான தன்மையை தந்த,Thandha - உண்டாக்கின எந்தாய்,Endhaai - ஸ்வாமியே! வெள்ளமேபுரை,Vellamepurai - கடல் போன்ற நின் புகழ்,Nin Pugazh - உன்னுடைய திருக்குணங்களில் குடைந்து,Kudainthu - மூழ்கி ஆடி பாடி,Aadi Paadi - ஆடியும் பாடியும் களித்து,Kalithu - செருக்குக் கொண்டு உகந்து உகந்து,Ukanthu Ukanthu - மிகவும் மகிழ்ந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து,Ulla Noygal Ellaam Thurandhu - உண்டான துன்பங்களெல்லாம் தொலையப்பெற்று. உய்ந்து,Uyndhu - உஜ்ஜூவித்து போந்து,Ponthu - (உன்னைக்) கிட்டினவனாயிருந்துவைந்து உன்னை எங்ஙனம் விடுகேன,Unnai Enganam Vidugain - உன்னை எப்படி விட்டிடுவேன்? |