திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 2844 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2844திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) ( நித்ய கைங்கர்யத்திலே ஊன்றியிருக்குமடியேன் உன்னை விடுவதற்கு ப்ரஸக்தி லேசமு மில்லை யென்று மீளவும் வற்புறுத்திப்பேசுகிறார்.) 5
உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5
பதவுரை Show / Hide
பால் கடல்,Paal Kadal - திருப்பாற்கடலிலே
ஐந்து,Aindhu - ஐந்தாகிய
பைந்தலை,Painthalai - படங்களோடு கூடிய சிரங்களையுடையவனாய்
ஆடு,Aadu - ஆடுகின்ற
அரவு,Aravu - ஆதிசேஷனாகிற
அணை,Anai - சயனத்தின் மீது
யோக நித்திரை,Yoga Nithirai - யோகநித்ரையிலே
மேவி,Mevi - பொருந்தி
சிந்தை செய்த,Sinthai Seydha - லோக ரக்ஷண சிந்தனை பண்ணின
எந்தாய்,Endhaai - என் ஸ்வாமியே!
உன்னை,Unnai - உன்னை
சித்தை செய்து செய்து,Sithai Seydhu Seydhu - நிரந்தரமாகச் சிந்தித்து
உய்ந்து,Uyndhu - உஜ்ஜீவனம் பெற்று
உலப்பு இலாத,Ulpup Illaadha - முடிவில்லாத
வெம்,Vem - கொடிய
என் தீவினைகளை,En Theevinai Kalai - எனது பாபங்களை
நாசம் செய்து,Naasam Seydhu - தொலைத்து
உனது,Unadhu - உன்னுடைய
அந்தம் இல்,Antham Il - முடிவில்லாத
அடிமை,Adimai - கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தை
அடைந்தேன்,Adaindhen - அடைந்தவனான நான்
விடுவேனோ,Viduvaeno - இனிவிட்டு நீங்குவேனோ?