திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 2845 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2845திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) ( ஆழ்வாரே! உமக்கு நான் இனிச் செய்யவேண்டுவதென்ன?’ என்று எம்பெருமான் கேட்க, ‘நான் பெறாததுண்டோ? எல்லாம் பெற்றேனே; இனிச் செய்ய வேண்டுவதொன்றுமில்லை காண்’ என்கிறார். ஆச்ரிதன் ப்ரதிஜ்ஞை பண்ணின ஸமயத்திலே வந்து தோன்றுமியல்வினனாக நீ யிருக்கும்போது, எனக்கு என்ன குறையென்கிறார்.) 6
உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என் முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான் உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என் முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6
பதவுரை Show / Hide
உன்னை,Unnai - உன்னை
சிந்தையினால்,Sinthaiyinaal - நெஞ்சாலே
இகழ்ந்த,Igazhndha - அநாதரித்த
இரணியன்,Iraniyan - ஹிரண்யகசிபுவினுடைய
அகல் மார்வம் கீண்ட,Akal Maarvam Keenda - அகன்ற மார்வைக் கிழித்தவனும்
என்,En - எனக்கு அநுபவிக்க வுரியவனும்
முன்னை,Munnaai - அநாதி ஸித்தனுமான
கோள் அரியே,Kol Ariye - மிடுக்குடைய நரசிங்க மூர்த்தியே!
உன்னை சிந்தை செய்து செய்து,Unnai Sinthai Seydhu Seydhu - உன்னை இடையறாது சிந்தித்து
நெடு,Netu - உயர்ந்த
உன் மா மொழி,Un Ma Mozhi - உன்னைப்பற்றின திருவாய் மொழியை
இசை பாடி,Isai Paadi - இசையுடனே பாடி
ஆடி,Aadi - (ஆனந்தத்திற்குப் போக்கு வீடாக) ஆடி
என் முன்னை தீ வினைகள்,En Munnaai Thee Vinaigal - எனது தொல்லைப் பாபங்களை
யான்,Yaan - நான்
முழுவேர் அரிந்தனன்,Muzhuver Arinthaan - முழுதும் வேரோடு அறுத்தொழித்தேன்;
எனக்கு,Enakku - அடியேனுக்கு
முடியாதது என்,Mudiyadathu En - (இனி) அஸாத்தியமான துண்டோ?