திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 2847 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2847திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (பிரானே! உன்னுடைய நிரிஹேதுகமான அநுக்ரஹத்தாலே பெற்ற இந்த நன்மை, இனியொரு நாளும் இடையறாதொழிய வேணும் இதுலே யெனக்கு வேண்டுவது, என்று எம்பெருமானைப் பிரார்த்திக்கின்றார்.) 8
மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன் பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் –2-6-8
பதவுரை Show / Hide
பல பிறப்பும்,Pala Pirappum - பல பிறவிகளிலும்
மாறி மாறி பிறந்து,Maari Maari Pirandhu - பலகாலும் பிறந்து (இப்படி பிறப்பது இறப்பதாய் செல்லுகிற ஜன்ம பரம்பரைகளிலே வாரா நிற்க)
அடியை அடைந்து,Adiyai Adainthu - இன்று உன் திருவடிகளைக்கட்டி
உள்ளம் தேறி,Ullam Theri - மனம் தெளிந்து
ஈறு இல்,Eeru el - முடிவில்லாத
இன்பத்து இரு வெள்ளம்,Inpathu Iru Vellam - ஆனந்தப் பெருவெள்ளத்திலே
யான் மூழ்கினன்,Yaan Moozhkinan - நான் ஆழ்ந்துவிட்டேன்
அசுரர் தம்,Asurar Tham - அஸூரர்களினுடைய
பல் குழாங்கள்,Pal Kuzhangal - பல கூட்டங்கள்
பாறி பாறி,Paari Paari - அடியோடு அழிந்து
நீறு எழ,Neeru Ezu - நீறாகும் படி
பாய் பறவை ஒன்று ஏறி வீற்றிருந்தாய்,Pai Paravai Ondru Eri Veettrindhaai - பாய்கின்ற பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனே!
எந்தாய்,Endhaai - என் தந்தையே!
உன்னை,Unnai - உன்னை
என்னுள்,Ennul - என்னிடத்தில் நின்றும்
நீக்கேல்,Neekkael - பிரியச் செய்யாதிருக்க வேணும்.