| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2849 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (ஆழ்வாரே! என்னை நீர்வளைத்துப் பேசுவது கிடக்கட்டும் நீர் அயோக்யதாநுஸந்தானம் பண்ணி என்னைவிட்டகன்று போய்விடுவீரோ என்று நான் கவலை கொண்டிராநிற்கையில், நீர்இங்ஙனே பேசக்கடவீரோ? நான் உம்மைவிட்டு எங்கும் போகப்போகிறதில்லை; நீர்என்னை விட்டுப் போகாதிருப்பீரா? சொல்லும், என்று எம்பெருமான் திருவுள்ளமாக, முக்காலத்திலும் எல்லாப்படியாலும் எனக்கு உபகாரம் செய்தருளின உன்னைப் பெற்றுவைத்து, இனிநான் அகன்று போவதற்கு என்ன ப்ரஸக்தி உண்டு, என்று உறுதியாகக் கூறி முடிக்கின்றார்.) 10 | போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிரா கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10 | போகின்ற காலங்கள்,Pogindra Kaalangal - நிகழ் காலங்கள் போய காலங்கள்,Poya Kaalangal - இறந்த காலங்கள் போகு காலங்கள்,Pogu Kaalangal - எதிர்காலங்கள் (ஆகிய இவற்றில்) தாய் தந்தை உயிர்ஆகின்றாய்,Thai Thandhai Uyir Aagindraai - தாயும் தந்தையும் உயிருமாயிருப்பவனே! பாகின்ற,Paagindra - பாவுகின்ற தொல் புகழ்,Thol Pugazh - நித்யமான கீர்த்தியையுடையனாய் மூ உலகுக்கும் நாதனே!,Moo Ulakukkum Naadane! - மூன்று லோகங்களுக்கும் நாதனாயிருப்பவனே! பரமா,Paramaa - ஸர்வோத்க்ருஷ்டனே! தண் வேங்கடம் மேகின்றாய்,Than Thiruvengadam Megindrai - குளிர்ந்த திருவேய்கடமலையை விரும்பி இருப்பவனே! தண் விரை நாறு,Than Virai Naaru - குளிர்ந்த பரிமளம் வீசப்பெற்ற துழாய் கண்னியனே,Thuzhai Kanniyanne - திருத்துழாய் மாலையை யுடையவனே! உன்னை நான்,Unnai Naan - அடைந்தேன் விடுவேனோ? |