| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2850 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (இப்பதிகத்தை இனிதாக அநுஸந்திக்குமவர்கள், பாகவதர் என்ற போக்கு உரியவராவர் என்று, இது கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார்.) 11 | கண்ணித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ் நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும் பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11 | தண் அம்துழாய் கண்ணிமுடி,Than Am Thuzhai Kanni Mudhi - குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையணிந்த முடியையும் கமலம் தடம் பெரு கண்ணனை,Kamalam Thadam Peru Kannanai - தாமரை போன்று விசாலமான நீண்ட திருக்கண்களையுடைய பெருமானுடைய புகழ் நண்ணி,Pugazh Nanni - திருக்குணங்களை அநுபவித்து தென் குருகூர் சடகோபன் மாறன் சொன்ன,Then Kurukoor Sadagoan Maran Sonna - தென் குருகூர் சடகோபன் மாறன் சொன்ன எண்ணில் சோர்வு இல்,Ennil Sorvu Il - அநுஸந்தானத்தில் சோர்வு இல்லாத அந்தாதி,Andhaadhi - அந்தாதித்தொடையான ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து,Aayiraththul Ivaiyum Orpaththu - ஆயிரத்தினுள்ளே இப்பத்துப் பாட்டையும் இசையொடும்,Isaiyodum - இசையோடுகூட பண்ணில் பாட வல்லார்அவர்,Pannil Paada Vallaravaru - பண்ணில் அமைத்துப் பாட வல்லவர்கள் கேசவன் தமர்,Kaesavan Thamar - எம்பெருமானடியாராகப் பெறுவர்ர்கள். |