திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2855 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (தம்மையும் தம்முடைய ஸம்பந்த ஸம்பந்திகளையும் எம்பெருமான் வைஷ்ணவராக்கினது, வடிவத்தைக் காட்டி யென்கிறார்.) 5 | விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5 | பதவுரை Show / Hideவிட்டு இலங்கு முடி அம்மான்,Vittu Ilanku Mudi Ammaan - நன்றாக விளங்குகின்ற திரு வபிஷேகத்தை யுடைய ஸ்வாமியான மதுசூதனன் தனக்கு,Madhusudhanan Thanukku - மதுவைக் கொன்ற பெருமானுக்கு பாதம் கைகள் கண்கள்,Padham Kaigal Kangal - திருவடிகளும் திருக்கைகளும் திருக்கண்களும் விட்டு இலங்கு செம் சோதி தாமரை,Vittu Ilanku Sem Sodhi Thaamarai - விரிந்து விளங்குகின்ற சிவந்த சுடரை யுடைய தாமரைப் பூக்களேயாம் திருஉடம்பு,Thiru Uthampu - திரு மேனியோ வென்றால். விட்டு இலங்கு கரும் சுடர் மலையே,Vittu Ilanku Karum Sudar Malaiye - நன்கு விளங்குகின்ற நீலவர்ணப்ரபையை யுடைய மலைபோன்றது; சீர்சங்கு,Seer Sangku - சிறந்த சங்கானது விட்டு இலங்கு மதியம்,Vittu Ilanku Mathiyam - மிக விளங்குகின்ற சந்திரனைப் போன்றது; சக்கரம்,Chakkaram - திருவாழி பரிதி,Parithi - ஸூர்யனைப்போன்றது; |