திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2856 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2856திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (எம்பெருமான் பக்கலிலே நான் ஊன்றுகைக்காக அவன்றான் நெடுங்காலம் க்ருஷி பண்ணினதுண்டு அதுவும் பரமக்கிருபையாலே யென்கிறார்.) 6
மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும் எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6
பதவுரை Show / Hide
மது சூதனை அன்றி,Madhusudhananai Andri - மதுவை முடித்த எம்பெருமானைத்தவிர
மற்று இலேன் என்று,Matru Ilaindru Endru - வேறொரு பற்றுடையேனல்லேன் என்று அநுஸந்தித்து
எத்தாலும்,Ethaalum - எந்தவஸ்துவினாலும்
கருமம் இன்றி,Karumam Indri - ஒரு காரியமில்லாமல் (அநந்யப்ரயோஜநமாக)
சூழ்ந்த,Soozhnda - அவனது திருக்குணங்களை வளைந்த
பாடல்கள்,Padalgal - பாசுரங்களை
நின்று பாடி ஆட,Nindru Paadi Aada - நிலை நின்று பாடியாடும்படி
ஊழி ஊழி தொறும்,Oozhi Oozhi Thorum - ஸதாகாலமும்
எனைத்து ஓர்பிறப்பும்,Enaithu Orpirappum - (நான் பிறந்த) எல்லாப் பிறவிகள் தோறும்
எதிர்,Edhir - எனக்கெதிரே
சூழல் புக்கு எனக்கே,Soozhal Pukku Enakke - சூழ்ச்சியோடே அவதாரித்து என்பொருட்டே
அருள்கள் செய்ய,Arulkal Seyya - க்ருபை பண்ணுதற்கு
எனக்கு ஏல்,Enakku Ael - எனக்கென்னலே
அம்மான் திரி விக்கிரமனை விதி சூழ்ந்துத,Ammaan Thiri Vikkiramanaai Vithi Soozhnthudh - ஸ்வாமியான த்ரிவிக்ரமனை விதி சூழ்ந்து கொண்டது