Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2857 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2857திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (எம்பெருமானே! உன்னுடைய குணாநுஸந்தாந பூர்வகமாக உன்னைத் துதித்துவணங்கி யநுபவிக்கு மிவிவளவையே பிரயோஜனமாகக் கொண்டிருக்கும் படியான மனத்தை எனக்குத் தந்தருளினாய்; உன்னுடைய ஸாமாத்தியமே ஸாமாத்தியம்! என்று கொண்டாடுகிறார்.) 7
திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7
என் வாமனனே,En Vaamanane - எனக்காக வாமனாவதாரமெடுத்த பகவானே!
திரிவிக்கிரமன் என்று,Thiruvikraman Endru - மூவடியாலே உலகங்களையெல்லாமளந்தவன் என்றும்
செம் தாமரை கண் எம்மான் என்று,Sem Thaamarai Kan Emman Endru - செந்தாமரை போன்ற கண்களையுடைய ஸ்வாமியென்றும்
என் செம் கனிவாய உருவில் பொலிந்த வெள்ளை பளிங்கு நிறத்தனன் என்று,En Sem Kanivaai Uruvil Polindha Vellai Palingu Nira Thanan Endru - எனக்கு போக்யமாய்ச் சிவந்து கனிந்த அதரத்தினுடைய அழகுபொலிந்த சுத்த ஸ்படிக வர்ணமான திரு முத்துக்களையுடையவன் என்றும்.
உள்ளி,Ulli - அநுஸந்திந்து
பரவி,Paravi - துதித்து
பணிந்து,Panindhu - வணங்கி
பல் ஊழி ஊழி,Pal Oozhi Oozhi - நெடுங்காலம்
நின் பாத பங்கயமே,Nin Paadha Pangayame - உனது பாதாரவிந்தங்களிலேயே
மருவி தொழும் மனம்,Maruvi Thozhum Manam - பொருந்தி அடிமை செய்தற்குறுப்பான மனத்தை
தந்தாய்,Thandhaai - கொடுத்தருளினாய்
வல்லை காண்,Vallai Kaan - நீ ஸமர்த்தனன்றே?