| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2858 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (தம் விஷயத்தில் எம்பெருமான் பண்ணிந மஹோபகாரத்திற்கு இன்னது கைம்மாறு செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்றமையைத் தெரிவிக்கும் பாசுரமிது, அவன் செய்த உபகாரம் யாதெனில், தன்னை யநுபவிப்பதற்கு உறுப்பாகாமலிருந்த நெஞ்சை மாற்றிப் பதஞ்செய்வித்த விதுவே மஹோபகார மென்கிறார்.) 8 | வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன் காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8 | என் சிரீதரனே,En Sreedharane - எனது திருமாலே! வாமனன் என்று,Vaamanan Endru - வாமன மூர்த்தியே யென்று சொல்லியும் என் மரதகம் வண்ணன் என்று,En Maradhagam Vannan Endru - மரதகம் போன்ற வொளியையுடைய எம்பெருமானேயென்று சொல்லியும் தாமரைக் கண்ணினன் என்று,Thaamarai Kanninan Endru - புண்டாரிகாக்ஷனே யென்று சொல்லியும் காமனை பயந்தாய் என்று,Kaamanai Payanthai Endru - மன்மதனை மகனாகப் பெற்றவனே யென்று சொல்லியும். உன் கழல்,Un Kazhal - உன் திருவடிகளில் பாடி பணிந்து,Paadi Panindhu - பாடிவணங்கி தூ மனத்தனன் ஆய்,Thoo Manathanaan Aay - பரிசுத்தமான மனத்தையுடையேனாய் பிறவி துழதி நீங்க,Piravi Thuzhadi Neenga - பிறவித் துயரம் தீரும் படியாக என்னை தீ மனம் கெடுத்தாய்,Ennai Thee Manam Keduthaai - என்னைத் தீய மனம் அற்றவனாக ஆக்கினாய்; உனக்கு,Unakku - இப்பெரு நன்றி செய்தவுனக்கு என் செய்கேன்,En Seykaen - என்ன கைம்மாறு செய்வேன்? |