| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2860 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (இங்ஙனம் மஹோபகாரகனான எம்பெருமானை ஒருநாளும் விடலாகாதென்று நெஞ்சுக்கு உரைக்கும் முகத்தால். தம்முடைய அத்யவஸாயத்தை வெளியிடுகிறார்) 10 | இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10 | நெஞ்சே,Nenje - மனமே! தெருடி ஆகில்,Therudi Aagil - நீ அறிவுடையை யாகில் இருடீகேசன் என்று,IrudiKesane Endru - ஹ்ருஷீகேசனே யென்றும் எம்பிரான் என்று,Empiran Endru - எம்பிரானே யென்றும் இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த,Ilankai Arakkar Kulam Murudu Theertha - இலங்கையிலிருந்த ராக்ஷ குலத்திற்கு முருடான ராவணனைத் பிரான் என்று,Piran Endru - தொலைத்த பிரானே யென்றும் எம்மான் என்று,Emman Endru - எம்பெருமானே யென்றும் அமரர் பெம்மான் என்று,Amarar Pemman Endru - நித்யஸூரிநாதனே யென்றும் சொல்லி வணங்கு,Vanangu - அவனை வணங்கு; திண்ணம் அறி,Thinnam Ari - இதைத் திடமாக அறிவாயாக; அறிந்து,Arindhu - அறிந்தபின் மருடி ஏலும்,Marudi Yelum - (மீண்டும்) சுலங்குவாயாகிலும் நம்பி பற்பநாபனை,Nambi Parpanabanai - குணபரிபூர்ணனான பத்மநாபனை விடேல் கண்டாய்,Videl Kandaai - விடாதே கொள். |