Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2862 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2862திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (தம் விஷயத்தில் அம்பெருமான் பண்ணின உபகாரம் மாஞானிகளாலும் அளவிட வொண்ணாதது என்கிறார். அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு இலக்காயிருக்கின்ற தம்மைப்போன்றவர்கள் அவனைக் காணக்கூடுமேயல்லது, ‘நம்முயற்சியாலே யறிவோம்’ என்றிருப்பார்க்கு அறியலாகாது என்கிறாராகவுமாம்.) 12
தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை,
ஆமோதரமறிய வொருவ ர்க்கென்றெதொழுமவர்கள்,
தாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும்,
ஆமோதரமறிய எம்மானையென்னாழிவண்ணனையே.–2-7-12
தாமோதரனை,Dhamodharanai - தாமோதரனென்கிற திரு நாமமுடையனும்
தனி முதல்வனை,Thani Mudhalvanai - ஒப்பற்ற ஸகல ஜகத்காரண பூதனும்
ஞாலம் உண்டவனை,Gnalam Undavanai - (பிரளயகாலத்தில்) உலகங்களைத் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனுமான எம்பெருமானை
தரம் அறிய,Tharam Ariya - பகுத்து அறிவதற்கு
ஒருவர்க்கு ஆமோ என்று,Oruvarukku Aamo Endru - ஒருவராலும் ஸாத்யமாகாதென்று துணிந்து
தொழுமவர்கள் தாமோதரன்,Thozhumavaragal Dhamodharan - வணங்குகின்றவர்களான
உரு ஆகிய சிவற்கும் திசை முகற்கும்,Uru Aakiya Sivargum Thisai Mukargum - எம்பெருமானுக்கு அவயவபூதர்களான சிவனுக்கும் பிரமனுக்கும்
என் ஆழி வண்ணனை எம்மானை,En Aazhi Vannanai Emmanai - கடல் வண்ணனான எம்பெருமானை
தரம் அறிய ஆமோ,Tharam Ariya Aamo - அளவிட்டு அறிதல் கூடுமோ?