| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2864 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (இப்பதிகத்தில் கூறப்படும் பொருள். இப்பாசுரத்தில் சுருங்க வருளிச் செய்யப்படுகிறது.) 1 | அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது இருவரவர் முதலும் தானே இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம் புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1 | அரவு அணை மேல்,Aravu Anai Mel - ஆதிசேஷ சயனத்தின் மீது அணைவது,Anaivadhu - சேர்வது பூ பாவை ஆகம் புணர்வது,Poo Paavai Aagam Punarvadhu - பெரிய பிராட்டியின் திருமேனியைக் கூடுவது; (ஆகிய இவை நித்ய விபூதியில் எம்பெருமானுடைய காரியங்கள்) அவர் இருவர்,Avar Iruvar - ப்ரஸித்தர்களான பிரமன் ருத்ரன் என்கிற இருவர்க்கும் முதலும் தானே,Mudhalum Thaane - முதல்வனும் அப்பெருமான் தானேயாயிருப்பன்; (அவதார முகத்தாலே) எப்பொருட்கும்,Epporudkum - எல்லாப் பொருளுக்கும் இணைவன் ஆம்,Inaivan Aam - ஸஜாதீயனாயிருப்பன்; வீடு முதல் ஆம்,Veedu Mudhal Aam - மோக்ஷத்தை யளிப்பவனுமவனே; பிறவி கடல்,Piravi Kadal - ஸம்ஸார ஸமுத்ரத்தை நீந்துவார்க்கு,Neenthuvaarku - நீந்திக் கரையேற விரும்புமவர்கட்கு புணைவன்,Punai Van - தெப்பமாயிருப்பவனுமவனே. |