திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2866 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) ( முதற்பாட்டில் “இருவரவர் முதலுந்தானே” என்றதை விவரித்துக் கொண்டு, அப்பெருமானுடைய ஐச்வர்ய ஸூசகமான சேஷ்டிதங்கள் எங்கும் ப்ரஸித்தமாகவே யுள்ளன வென்கிறார்.) 3 | புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3 | பதவுரை Show / Hideதன் புணர்த்த,Than Punarthu - தன்னைப் படைத்த உந்தியோடு,Undhiyodu - திருநாபியோடேகூட ஆகத்து,Aagathu - திருமேனியிலொரு பக்கத்திலும் மன்னி,Manni - பொருந்தியிருந்து புணாக்கும்,Punaakkum - லோக ஸ்ருஷ்டியைப் பண்ணுகிற அயன் ஆம்,Ayan Aam - பிரமனும் தானேயாயிருப்பன்; அழிக்கும் அரன் ஆம்,Azhikkum Aran Aam - ஸம்ஹாரிக்கிற ருத்ரனும் தானேயாயிருப்பன். தன் மார்வில்,Than Maarvil - தனது திருமார்பிலே புணர்த்த,Punartha - சேர்த்துக்கொள்ளப்பட்ட திரு ஆகி,Thiru Aagi - பிராட்டியை யுடையனாய் தான் சேர்,Thaan Ser - தானே தனக்குத் தகுதியான புணர்ப்பன்,Punarppan - செயலை யுடையனான அப்பெருமானது பெரு புணர்ப்பு,Peru Punarppu - பெரிய வியாபாரம் எங்கும்,Engum - எவ்விடத்தும் புலன்,Pulan - பரத்யக்ஷயோக்யமே. |