திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2872 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2872திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (கீழ்ப்பாட்டில் “ஏண்பாலுஞ் சோரான் பரந்துளனாமெங்குமே” என்றதில் சிலர் சங்கை கொண்டார்களாக, அவர்களை நோக்கிக் கூறுகின்றார்- எம்பெருமானுடைய வ்யாபகத்வத்திலே விப்ரதிபத்தியுடையார் இரணியன் பட்ட பாடுபடுவார்கள்; ஆகையாலே கெடுவிகாள்! அவன் பட்ட பாடு படாதே கிடிகோள்-என்கிறார்.) 9
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9
பதவுரை Show / Hide
கண்ணன் எங்கும் உள்ள என்ற,Kannan engum ulla enra - எம்பெருமான் எங்கு மிருக்கிறானென்று சொன்ன
மகனை,Maganai - புத்திரனை (ப்தஹ்லாதனை)
இரணியன்,Iranian - (பிதாவான) ஹிரண்யாசுரன்
காய்ந்து,Kaaynthu - கோபித்து
இங்கு இல்லை என்று,Ingu illai enru - இவ்விடத்தில் இல்லை கிடாய் என்று
தூண் புடைப்ப,Thoon putappu - தூணை அறைய,
அங்கு,Angu - அந்தத் தூணிலே
அப்பொழுதே,Appozhudhe - அந்த க்ஷணத்திலேயே
அவன் வீய,Avan veey - அவிவிரணியன்முடியும்படி
தோன்றிய,Thondriya - ஆவிர்ப்பவித்த
என் சிங்கப் பிரான்,En singapiran - நரஸிம்ஹ மூர்த்தியான எம்பிரானுடைய
பெருமை,Perumai - மேன்மை
ஆராயும் சீர்மைத்தே,Aaraayum seermaithae - ஆராய்தற்குரிய தன்மையதோ?