திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2875 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2875திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (பிரானே! உன்திருவடிகளை என் தலைமீது வைக்குமித்தனையே வேண்டுவது; எவ்வகையாலும் விலக்ஷணமான மோக்ஷத்திலும் எனக்கு விருப்பமில்லை யென்கிறார்.) 1
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக் கைம்மா துன்பம் கடிந்த பிரானே அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1
பதவுரை Show / Hide
கைம்மா துன்பம் கடிந்த பிரானே,Kaiamma thunbam katintha pirane - கஜேந்திராழ்வானுடைய இடரைத் தீர்த்த பிரபுவே!
நின்,Nin - தேவரீருடைய
செம்,Sem - சிவந்த
மா,Maa - மேன்மை தங்கிய
பாதபற்பு,Paadhaparpu - பாதபத்மங்களை
தலை,Thalai - என் தலையிலே
ஒல்லை,Ollai - சீக்கிரமாக
சேர்ந்து,Seerndhu - சேர்க்கப்பெறறால்
எமர்வீடு திற,Emar veedu thira - மிகவும் விலக்ஷணமான மோக்ஷத்தைப் பற்றின பேச்சையும்
செப்பம்,Seppam - பிரஸ்தாவிக்கமாட்டோம்
அம்மா,Amma - ஸ்வாமியே!
அடியேன் வேண்டுவது,Adiyen venduvadhu - நான் பிரார்த்திப்பது
ஈதே,Eedhe - இதுதான். (நின் செம்மாபாதபற்புத்தலை சோக்க வேணுமென்பதே யென்றபடி)