திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2877 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2877திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (உத்க்ரமான தசையான துர்க் கதியிலும், நான் இளையாதே உன் திருவடிகளை ஏத்தும்படி பண்ணி யருள வேணுமென்கிறார்) 3
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ண பிரானே ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3
பதவுரை Show / Hide
தீ வினை செய்யேல் என்று,Thee vinai seyyel endru - கெட்ட காரியங்களைச் செய்யாதே என்று
அருள் செய்யும்,Arul seyyum - (என் திறத்தில்) கிருபை செய்தருளின
கை ஆர்சக்கரம்,Kai aarchakaram - திருக்கையில் பொருத்தின திருவாழியை உடைய என் கண்ணபிரானே!
ஐயார்கண்டம் அடைக்கிலும்,Aiyaar kandam adaikkilum - கோழை வந்து கழுத்தையடைக்கும்படியான துர்த்தசை நேர்ந்தாலும்
நின் கழல்,Nin kazhal - தேவரீருடைய திருவடியை
எய்யாதேத்த,Eyyaadhedha - துதிக்கும்படியாக
எனக்கு அருள்செய்,Enakku arulsei - என்னளவில் கிருயை பண்ணவேணும்