Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2879 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2879திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (தேஹமே ஆத்மாவாக இருக்கட்டும் அன்றி தேஹத்திற்காட்டில் வேறுபட்டிருப்பானொருவன் ஆத்மாவாக இருக்கட்டும் ஸ்வர்க்கம் நரகம் முதலானவற்றில் எது கிடைத்தாலும் கிடைக்கட்டும் இவற்றிலெல்லாம் எனக்கொரு நிர்ப்பந்தமில்லை; பின்னை எதில் நிர்ப்பந்த மென்னில் தேவரீர் கரமங்காரணமான பிறப்பு அல்லாதவராயிருந்து வைத்து ஆச்ரித ரக்ஷணார்த்தமாகப் பல பிறவிகளிலும் பிறந்தருள்பவராயிராநின்றீரே; அந்த அவதாரங்களையும் ஸகல திவ்ய சேஷ்டிதங்களையும் மறவாதே, என்றும் அநுபவிக்கப் பெறுவேனாகவேணும் ஈதொன்றிலேயே எனக்கு நிர்ப்பந்தம் என்கிறார்.) 5
சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5
இறப்பில்,Irapil - மரணமான பிறகு
சிறப்பில் வீடு,Sirappil veedu - சிறப்புடன் கூடிய மோக்ஷத்தையோ
சுவர்க்கம்,Suvarkkam - ஸ்வர்க்கத்தையோ
நரகம்,Naragam - நரகத்தையோ
எய்துக,Eydhuga - அடைவேனாக
எய்தற்க,Eydharka - அடையாதொழிவேனாக
பிறப்பு இல்,Pirappu il - (நம்மைப்போலே கருமமடியாகப் பிறவாதவனும்)
பல் பிறவி,Pal piravi - அநுக்ரஹ மடியாகப்) பல பிறவி பிறக்கின்றவனுமான ஸ்வாமியை
மறப்பு ஒன்று இன்றி,Marappu onru indri - சிறிதும் மறவாமல்
என்றும்,Endrum - எக்காலத்திலும் (சிந்தித்து)
யானும் மகிழ்வேன்,Yaanum magizhven - (நீசனான) நானும் களிப்புறுவேன்.