திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2881 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2881திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (வாராய் என்றபோதே வரக்காணாமையாலே வருந்தி, பின்னையும் அபிநிவேசத்தின் மிகுதியாலே, நான் சடக்கென வுன்னைக் கிட்டும்படி வாராயென்கிறார்.) 7
வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ் பேராதே நான் வந்தடையும் படி தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும் ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7
பதவுரை Show / Hide
உன்,Un - உன்னுடைய
திரு பாதம் மலர் கீழ்,Thiru padham malar keelz - திருவடித்தாமரைகளின் கீழ்
பேராதே,Peradhe - விலகாமல்
யான் வந்து அடையும்படி,Yaan vandhu adaiyumpadi - நான் வந்து சேரும்படியாக
தாராதாய்,Thaaradhaai - அருள் புரியாதவனே!
உன்னை என்னுள் என்றும் வைப்பில்,Unnai ennull endrum vaippil - உன்னை என்னுள்ளே எந்நாளும் வைத்து அநுபவித்தாலும்
ஆராதாய்;,Aaraadhaai; - தெவிட்டாதவனே!
எனக்கு,Enakku - என் கண்ணெதிரே
என்றும் எக்கால்,Endrum ekkaal - எப்போதும்
வாராய்,Vaarai - வந்தருள வேணும்