| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2883 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (தேவரீருக்கும் எனக்கும் ஸ்ம்பந்தம் அநாதிஸித்தமர்கவேயிருந்தும், அந்தோ! நெடுநாளாக அதனை மறந்து அஹங்காரமமகாரங்களால் பாழாய்ப் போனேனே, என்று இழந்த நாளைக்கு அநுதபிக்கிறார்.) 9 | யானே என்னை யறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் யானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9 | வானே ஏத்தும்,Vaane etthum - விண்ணுலகம் முழுவதும் துதிக்குமாறு உள்ள எம் வானவர் ஏறே,Em vaanavar aere - நித்யஸூரிநாதனான எம் பெருமானே! யானே,Yaane - நான் தானே என்னை,Ennai - என்னை அறிய கிலாதே,Ariya kilaadhe - அறியமாட்டாமல் யானே நீ,Yaane nee - யான் நீயே யென்னலாம்படி வேற்றுமையற்றிருப்பேன்; யானே என் தனதே என்று இருந்தேன்,Yaane en thanadhe endru irundhaen - அஹங்கார மமகாரங்கள் கொண்டிருந்தேன். என் உடைமையும் நீயே,En udaimaiyum neeye - (இப்போது அவை தவிர்ந்து நான் அநுஸந்திக்கும் வகை யாதெனில்) எனது உடைமைகளும் நீயிட்ட வழக்காயிருக்கும் (என்பதே) |