| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2885 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (இத்திருவாய்மொழியை ஓதவே, இதுதானே புருஷார்த்தத்தைப் பெறுவிக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | விடலில் சக்கரத் தண்ணலை மேவல் விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல் கெடலில் யாயிரத்துள் இவை பத்தும் கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11 | விடல் இல்,Vidal il - விடுதலில்லாத சக்கரத்து,chakkarathu - திருவாழியையுடைய அண்ணலை,Annalai - எம்பெருமானை மேவல் விடல் இல்,Meval vidal il - பொருந்துவது ஒரு போதும் விடாமலிருக்கப் பெற்ற வண்குருகூர்சொல்,Vangurukoor sol - சடகோபன் அருளிச் செய்த கெடல் இல்,Kedal il - அழிவற்ற (நித்யமான) ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரம் பாடலுள்ளும் இவை பத்தும்,Ivai paththum - இப்பதிகம் கிளர்வார்க்கு,Kilarvaarkku - தன்னை ஓதுமவர்களுக்கு கெடல் இல் வீடு செய்யும்,Kedal il veedu seyyum - கெடுதல் ஒன்றுமில்லாத மோஷானந்தத்தைப் பண்ணிக் கொடுக்கும். |