Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2891 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2891திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலைக்குப் போகிற மார்க்கமுண்டே, அதனைச் சிந்திப்பது தானும் போது மென்கிறார்.) 6
கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6
kilmai ceyyate,கீழ்மை செய்யாதே - இழிவான செயல்களைச் செய்யாமல்
kiri ena,கிறி என - (இப்போது நான் சொல்லுகிறதை) நல்ல வுபாயமென்று நினையுங்கோள்
uri amar,உறி அமர் - உறிகளிலே அமைத்துவைத்த வெண்ணெயை
untavan,உண்டவன் - அமுது செய்த கண்ணபிரானுடைய
koyil,கோயில் - ஆலயமாய்
mariyotu pinaicer,மறியோடு பிணைசேர் - தம் குட்டிகளோடுகூட மான்பேடைகள் சேர்ந்து வாழப்பெற்ற
maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலையினுடைய
neri,நெறி - வழியிலே
pata,பட - செல்லவேணுமென்கிற
atuve,அதுவே - அந்த நினைவு ஒன்றையே
ninaivatu,நினைவது - நினைப்பது
nalam,நலம் - நல்லது.