திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2898 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (அழகருடைய வடிவழக்குக்கு ஒப்பாகக் போருவன இல்லாமையாலே அவ்வழகைப் பற்றி உலகத்தார் சொல்லும் துதிமொழிகள் நிறக்கேடாகவே தலைகட்டுமென்கிறார்.) 2 | கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2 | பதவுரை Show / Hideபரம் சோதி,Param sodhi - பரஞ்சோதி யுருவனே!, கட்டுரைக்கில்,Katturaikil - சொல்லப் புகுந்தால் நின்கண் பாதம் கை,Ninkan paatham kai - உனது திருக்கண் திருவடி திருக்கைகளுக்கு தாமரை,Thaamarai - தாமரைப்பூ ஒவ்வா,Ovvaa - உவமையாகப் போராது; சுட்டு உரைத்த நன் பொன்,Suttu uraitha nan pon - நெருப்பிலிட்டச் சுட்டு உரை கல்லில் உரைக்கப்படும் மாற்றுயர்ந்த பொன்னானது உன் திருமேனி ஒளி ஒவ்வாது,Un thirumeni oli ovvaadhu - உனது திவ்யமான விக்ரஹ காந்திக்கு ஒப்பாகமாட்டாது; இ உலகு,I ulagu - இவ்வுலகிலுள்ளோர் ஒட்டு உரைத்து,Ottu uraithu - த்ருஷ்டாந்தம் சொல்லி உன்னை புகழ்வு எல்லாம்,Unnai pugazhvu ellaam - உன்னைத் துதிப்பதெல்லாம் பெரும்பாலும்,Perumbaalum - மிகவும் பட்டுரை ஆய்,Patturai aay - நிரர்த்தக சப்தமாகி புற்கென்றே காட்டும்,Purkenrae kaattum - அவத்யாவஹமாகவே தலைக்கட்டும் |