| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2899 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (ஆழ்வீர்! உலகர் ஒட்டுரைத்துக் பேசுவதெல்லாம் எனக்கு நிறக்கோடாக முடிகின்றதே யன்றிப் புகழ்ச்சியாக ஆகின்றதில்லை யென்கிறீர்; *மயர்வற மதிநலமருளப் பெற்ற நீர் அழகாகப் பேசலாமன்றோ; எனக்கு நிறக்கோடாகாதபடிக்கு நீர் பேசலாமே என்ன; என்னாலுமாகாதென்கிறார்.) 3 | பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர் பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3 | பரம் சோதி,Param sodhi - பரஞ்சோதியான பெருமானே! நீ பரம் ஆய்,Nee param aay - நீயே ஸர்வோத் க்ருஷ்டனாயிருக்க நின் இகழ்ந்து பின்,Ninn igazhndhu pin - உன்னைத்தவிர மற்று ஓர் பரம் சோதி இன்மையின்,Martru or param sodhi inmai-yin - வேறொரு பரஞ்சுடர் இல்லாமையாலே படி ஓவி நிகழ்கின்ற,Padi ovi nizhalkinra - உபமான மில்லாதபடி யிருக்கின்ற பரம் சோதி நின்னுள்ளே,Param sodhi ninnullee - ‘பரம் ஜ்யோதிஸ்’ என்று உபநிஷத்துக்களில் ஒதப்பட்டுள்ள உன்னுடைய ஸங்கல்பத்துக்குள்ளே படர் உலகம் படைத்த,Patar ulagam padaita - விசாலமான உலகங்களைப் படைத்த எம் பரம் சோதி,Em param sodhi - எம்பரஞ்சுடருடம்பனே! கோவிந்தா,Govindha - நீர்மைக்கு எல்லை யில்லாதவனே! பண்பு,Panbu - உனது ஸ்வரூப ஸ்வபாவங்களை உரைக்க மாட்டேன்,Uraikka mattean - வருணிக்க சக்தனல்லேன். |