Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2900 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2900திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (“கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே” என்றார் கீழ்ப்பாட்டில் அது, புத்திபூர்வமாகச் சொல்லமாட்டாமையைத் தெரிவித்தபடி. அழகருடைய அழகுதானே பேசுவிக்கப் பேசுகிறாரிதில்.) 4
மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4
மலர்தலை,Malar thalai - திருநாபிக்கமலாத்தைத் தலையிடமாகக் கொண்டு தோன்றிய
இம் மா ஞாலம்,Im maa nyaalam - இப்பெரிய வுலகமானது
நின் மாடு ஆய,Ninn maadu aay - உன்னுடைய ஸ்வரூபத்தைப் பற்றியதான
மலர் புரையும் திரு உருவம்,Malar puraiyum thiru uruvam - பூப்போலழகிய திவ்யமான விக்ரஹத்திலே
மனம் வைக்க மாட்டாதே ஆகிலும்,Manam vaikka maattaadhe aagilum - ஈடுபட முடியாதபடி யிருக்கச் செய்தேயும்
மாட்டாத பல சமயம் மதி கொடுத்தாய்,Matadha pala samayam madhi koduthaai - (அதற்கு மேலே) தெளிவுக்குக் காரணமாகமாட்டாத பலவகைப்பட்ட பாஹ்யகுத்ருஷ்டிமத பிரசாரமும் பண்ணிவைத்து மோஹஜநகனுமானாய் (அவ்வளவுமல்லாமல்)
மலர் துழாய் மாட்டே நீ மனம்வைத்தாய்,Malar thuzhaai maatte nee manam vaithaai - (இவ்வுலகத்தைத் திருத்திப் பணிகொள்ளும் வழியில் நோக்கம் செலுத்தாமல் திருத்துழாய் மலர் முதலி யஸ்வகீய போக்ய வஸ்துக்களின் அநுபவத்திலே நீ ஊன்றி யிருக்கின்றாய்;
மா ஞாலம் வருந்தாதே,Maa gnalam varundhaadhe - (இப்படியாகில்) பெரிய இவ்வுலகம் இழந்தேபோகாதோ?