திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2906 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2906திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (பிரமன் முதலானாரும் உன் சேஷித்வத்தை யறிந்து ஆச்ரயிக்குமாறு நீ யிருக்கு மிருப்பு ஆச்சரியமோ வென்கிறார்.) 10
மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும் இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10
பதவுரை Show / Hide
மறை ஆய,Marai aay - மறை பொருள்களையுடையவையான
நால் வேதத்துள் நின்ற,Naal vaedhathul nindra - நான்கு வேதங்களுக்கும் உள்ளுறை பொருளாய் நின்ற
மலர் சுடரே,Malar sudare - விகாஸத்தையுடைய சோதி வடிவானவளே!
முறையால்,Muraiyaal - முறைப்படி
இ உலகு எல்லாம்,e ulagu ellaam - இவ்வுலகங்களை யெல்லாம்
படைத்து,Padaitthu - ஸ்ருஷ்டித்து
இடந்து,Idandhu - (பிரளயத்திலே புக்கு) இடந்தெடுத்து
உண்டு,Undu - (மஹாப்ரளயத்திலே) திருவயிற்றிலே வைத்து நோக்கி
உமிழ்ந்து,Uzhindhthu - (பிறகு) வெளிப்படுத்தி
அளந்தாய்,Alanthaay - (வாமன மூர்த்தியாய்) அளந்துகொண்ட பெருமானே!
பிறை ஏறு சடையானும்,Pirai yeru sadaiyaanum - சந்திரகலை தங்கிய சடையையுடையனான சிவபிரானும்
நான்முகனும்,Naanmuganum - நான்முகக்கடவுளும்
இந்திரனும்,Indiranum - தேவேந்திரனும்
இறை ஆதல் அறிந்து ஏத்த,Irai aadhal arindhu yetha - நீயே ஸர்வஸ்வாமி யென்னுமிடத்தை யுணர்ந்து துதிக்குமாறு
வீற்றிருத்தல் இது,Veetiruthal idhu - எழுந்தருளியிருக்குமிருப்பு
வியப்பே,Viyappe - ஆச்சரியமோ?