| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2908 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (உன்னை யடிபணிந்து உய்வதற்காக நீ தந்தருளின சரீரத்தைக்கொண்டு உன்னைப் பணியாமல் அவ்வுடலின் வழியே யொழிகி அநர்த்தப்பட்டேன்; நான் உன்னை என்று ஸேவிக்கப் பெறுவது என்று ஆர்ந்தராய்க் கூப்பிடுகிறார்.) 1 | முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1 | முந்நீர் ஞாலம் படைத்த,Munneer gnaalam padaitha - கடல் சூழ்ந்த இவ்வுலகை ஸ்ருஷ்டித்தவனும் எம் முகில் வண்ணனே,Em mugil vannaney - மேகத்தின் நன்மைபோன்ற தன்மையை யுடையவனுமான எம்பெருமானே! அ நாள்,A naal - அந்த ஸ்ருஷ்டி ஸமயத்தில் நீ தந்த,Nee thantha - நீ கொடுத்தருளின ஆக்கையின்,Aakaiyin - சரீரத்தினுடைய வழி,Valzi - வழியிலேயே உழல்வேன்,Uzhala ven - நடந்துகேட்டுத் திரிகின்றேன் வெம்நாள்,Vemnaal - (உணர்ச்சி யுண்டான பின்பு) பரிதாபமயமான நாளிலே நோய் வீய,Noi veeya - வியாதிகள் தீரும்படி வினைகளை,Vinaiyai - கரும பந்தங்களை வேர் அறுபாய்ந்து,Ver arupayinthu - வேர்ப்பற்றோடே அறுத்து தொலைக்கப்பெற்று யான்,Yaan - அடியேன் உன்னை,Unnai - (மஹோபகாரனான) உன்னை இனி எந்நாள் வந்து கூடுவன்,Ini ennaal vandhu kooduvan - அடையப் பெறுவது இனி என்றைக்கோ! |