| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2912 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) ((வந்தாய்போலே) கீழ்ப்பாட்டில் “நின்தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான். “ஆழ்வீர்! வந்தருளவேணும் வந்தருளவேணுமென்னா நின்றீர்; ஒரு கால் வந்து (இராமனாய்) பதினோராயிரமாண்டு இருந்தோம்; மற்றொருகால் வந்து (க்ருஷ்ணனாய்) நூற்றாண்டிருந்தோம். இன்னமும் வருவதென்றால் அது ப்ரயாஸமாயிருக்கிறது காணும் என்ன; அதுகேட்ட ஆழ்வார், ‘பிரானே! அவ்வவதாரங்கள் போலே எனக்காகவும் வந்து சில நாளிருந்து ஸேவை ஸாதிக்கத் திருவுள்ளமானால் அழகியது; அது செய்யத் திருவுள்ளமில்லையாகில் ஆனைக்குத் தொற்றினாப்போலேயும் ப்ரஹ்லாதனுக்குத் தோற்றினாப்போலேயும் எனக்குமொருகால் தோற்றியருளியாகிலும் உதவ வேணுமென்கிறார்.) 5 | வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில் கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–3-2-5 | வந்தாய் போலே வந்தும்,Vandhai poale vandhum - (ப்ரஹ்லாதன் கஜேந்திரன் முதலானார்க்கு) வந்து தோன்றினாய் போலே வந்தாகிலும் என் மனத்தினை,En manaththinai - எனது நெஞ்சை சிந்தாமல்,Sindhaamal - சிதிலமாகாதபடி நீ செய்தாய்,Nee seydhai - நீ செய்வதில்லை இதுவே,Ithuvae - உதவி செய்யாமையாகிற இதுவே இது ஆகில்,Ithu aagil - இப்படியே நீடித்திருக்குமாகில் கொந்து ஆர்காயாவின் கொழுமலர் திரு நிறைத்த எந்தாய்,Kondhu aarkaayavin kozhumalar thiru niraitha endhai - கொத்துக்கள் நிறைந்த காயாவினுடைய செழுமை தங்கிய பூவின் நிறம்போன்ற நிறத்தையுடைய ஸ்வாமியே! உன்னை,Unnai - (இப்படிப்பட்ட அழகை அநுபவித்தே தரிக்கவல்ல) அடியேன்.உன்னை எங்கு,Engu - எவ்விடத்து வந்து அணுகிற்பன்,Vandhu anugirpan - வந்து கிட்டவல்லேன். |