| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2913 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (பிரானே! இதற்கு முன்புள்ள காலமெல்லாம் உன் திருவடிகளைச் சேருமைக்கு உறுப்பாயிருப்பதொரு ஸுக்ருதத்தைச் செய்ததுமில்லை, துஷ்க்குதல்கள் தவிர்ந்ததுமில்லை; எதையும் தோன்றினபடிச் செய்து திரிந்தேன்; இப்படிச் செய்து திரிந்து மிகவும் அற்பமான விஷயரஸங்களைப் புஜித்து உன் திருவடிகளுக்குப் புறம்பாகியே அகன்றொழிந்தேன். அனந்தகோடி ஜீவராசிகளுக்குக் கரண்களே பரப்ரதானம் பண்ணி கடத்திப் போருகின்றவுனக்கு என்னை யொருவனையும் உன் திருவடிகளுக்கு உரியேனாம்படி பண்ணியருளுகை அரிதான காரியமோ? அங்ஙனே திருவுள்ளம் பற்றியருளலாகாதோ? இந்த மஹாபாக்யம் என்றைக்கு நேருமோ என்கிறார்.) 6 | கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால் அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின் நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6 | முனம் நாளால்,Munam naalaal - முற்காலமெல்லாம் கிற்பன் என்றிலன்,Kirpan endrilan - நன்மைகளைச் செய்யவல்லேனென்கிற இசையும் கொத்ணண்ணிடிலேன் கில்லேன் என்றிலன்,Killen endrilan - தீமைகளைச் செய்யமாட்டேனென்கிற தவிர்தலும் கொண்டிலேன்: (ஸுக்ருதங்களைச் செய்யாதவனாயும் துஷ்க்ருதங்களையே செய்யவனாயும்) அற்பம் சாரங்கள் அவை,Arpam saarangal avai - க்ஷுத்ர விஷயங்களையே சுவைத்து,Suvaitthu - அநுபவித்து அகன்று ஒழித்தேன்,Aganru ozhithaen - உன்னைவிட்டு நீங்கிக் கிடந்தேன். பல்பல் ஆயிரம் உயிர்,Palpal aayiram uyir - எண்ணிறந்த ஜீவராசிகளை செய்த,Seydha - நினைத்தபடி உண்டாக்கவல்ல பரமா,Parama - ஸமர்த்தனே! நின்,Nin - உன்னுடைய நல் பொன்சோதி தாள்,Nal ponsodi thaal - விலக்ஷணமாய் அழகிய ஒளியுருவாய் திருவடிகளை நணுகுவது,Nanuguvadhu - நான் கிட்டுவது எஞ்ஞான்று,Yennjaandru - என்றைக்கு. |