Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2916 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2916திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (ஸ்ரீகிருஷ்ணனாயும் ஸ்ரீவாமநனாயும் அவதரித்து உலகுக்குப் பண்ணின அநுக்ரஹத்திற்குத் தப்பின நான் இனி யுன்னைப் பெறுதற்கு வழியுண்டோவென்று க்லேசந்தோற்றப் பேசுகிறார்.) 9
கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆநிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9

கொடு வினை,Kodu vinai - கொடிய பாவங்களுக்குப் பிறப்பிடமாகிய
தூற்றுள் நின்று,Thoottrul ninru - நுழைந்தால் வெளிப்பட முடி(யாத) புதர் போன்ற ஸம்ஸாரத்தில் அகப்பட்டு நின்று
பல காலம்,Pala kaalam - அநேக காலம்
வழி திகைத்து,Vali thigaiththu - வழி தெரியாமல் சுழன்று
அலமருகின்றேன்,Alamarugindren - வருந்திக் கிடக்கின்ற
பாவியேன்,Paaviyen - மஹாபாபியான நான்
அன்று,Andru - முன்பொருகால்
மேவி,Mevi - திருவள்ளமுவந்து
ஆநிரை,Aa nirai - பசுக்கூடட்ங்களை
காத்தவன்,Kaaththavan - ரக்ஷித்தவனும்
உலகம் எல்லாம் தாவிய,Ulagam ellaam thaaviya - (த்ரிவிக்ரமனாய்) உலகங்களையெல்லாம் அளந்தவனுமாகிய
அம்மானை,Ammaanai - ஸ்வாமியை
இனி,Ini - இனி
கூவி கூவி,Koovi koovi - பலகாலும் கூப்பிட்டு
எங்கு,Engu - எங்கே
தலைப்பெய்வன்,Thalaippeivan - கிட்டுவேன்?