திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2930 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2930திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (எம்பெருமான் ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிக்குக் காரணமான பஞ்சமஹாபூதங்களையும்-, அந்த பூதங்களினால் இயன்ற பொருள்களையும் தனக்குச் சரீரமாகக் கொண்டு விலக்ஷணமான குணங்களோடு ஆழ்வார்க்கு ஸேவை தந்தருளியதனால், அத்தகைய நிலைமையை ஸேவிக்கப்பெற்ற ஆழ்வார் அப்பெருமானை இப்படிப்பட்ட தன்மையுடையவனென்று கூறுதற்கு இயலாமல் திகைத்து நிற்கின்றார். “கண்ணனைக் கூவுமாறே” என்ற முடிக்குஞ்சொல் இன்றி விட்டிருக்கிறார்; அதனை வருவித்து உரைத்துக்கொள்க.) 1
புகழும் நல் ஒருவன் என்கோ! பொரு இல் சீர்ப் பூமி என்கோ! திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ! வாயு என்கோ! நிகழும் ஆகாசம் என்கோ! நீள் சுடர் இரண்டும் என்கோ! இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ! கண்ணனைக் கூவு மாறே. -3-4-1
பதவுரை Show / Hide
கண்ணனை,Kannanai - (உலகத்து எல்லாப் பொருள்களையும் தனக்குச் சரீரமாகவுடைய) எம்பெருமானை
புகழும்,Pugazhum - (வேதங்கள் இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றால்) புகழ்ந்து கூறப்பெற்ற
நல்,Nal - விலக்ஷணமான குணங்கள் முதலியவற்றையுடைய
ஒருவன்,Oruvan - ஒப்பற்றவன்
என்கோ,Enko - என்று சொல்வேனோ?
பொருவு இல் சீர்,Poruvu il seer - ஒப்பில்லாத சிறப்புக்களையுடைய
பூமி என்கோ,Bhoomi enko - பூமியென்று சொல்வேனோ?
திகழும்,Thigazhum - விளங்குகிற
பரவை என்கோ,Paravai enko - நீர்நிலையென்று சொல்வேனோ?
தீ என்கோ,Thee enko - அக்கினியென்பேனோ?
வாயு என்கோ,Vayu enko - காற்று என்பேனோ?
நிகழும் ஆகாசம் என்கோ,Nigazhum aagaasam enko - எங்குமுள்ளதான ஆகாசமென்பேனோ?
நீள்சுடர் இரண்டும் என்கோ,Neel sudar irandum enko - (ஸூர்யன் சந்திரன்) என்ற இரண்டு சுடர்களுமென்பேனோ?
இகழ்வு இல்,Igazvu il - இகழப்படுதலில்லாத (வேண்டும் பொருள்களாகக் கைக் கொள்ளுதற்கு உரிய)
இவ் இனைத்தும் என்கோ,Iv inaitthum enko - இவையெல்லாப் பொருள்களுமென்பேனோ?
கூவும் ஆறு ஏ,Koovum aaru ae - (எம்பெருமானைச்) சொல்லியழைக்கும் விதம் (என்னே) (யான் இன்னதென்று உணறேன் என்றபடி.)