திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2931 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2931திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (கீழ்ப் பாசுரத்திற் கூறிய பஞ்ச பூதங்களின் காரியப் பொருளாக எம்பெருமானை இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் அநுபவிக்கிறார்.) 2
கூவுமாறு அறிய மாட்டேன், குன்றங்கள் அனைத்தும் என்கோ! மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ! நாவியல் கலைகள் என்கோ! ஞான நல் ஆவி என்கோ! பாவு சீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே.–3-4-2
பதவுரை Show / Hide
பாவுசீர் கண்ணன்,Paavuseer Kannan - பரம்பின திருக் கல்யாண குணங்களை யுடைய க்ருஷ்ணனென்ற திருநாமமுடையவனும்
பங்கயக் கண்ணன்,Pangaya Kannan - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனும்
எம்மானை,Emmaanai - எமது தலைவனுமாகிய எம்பெருமானை
குன்றங்கள் அனைத்தும் என்கோ,Kunrangkal anaiththum enko - எல்லாமும் என்று சொல்வேனோ?
மெவு சீர் மாரி என்கோ,Mevu seer maari enko - (கண்டார்) விரும்பும்படியான சிறப்பையுடைய மழையென்பேனோ?
விளங்கு தாரகைகள் என்கோ,Vilangum thaarakaigal enko - பிரகாசிக்கின்ற நக்ஷத்திரங்களென்பேனோ?
நா இயல் கலைகள் என்கோ,Naa iyal kalaigal enko - நாவினால் முயற்சியோடு உச்சரிக்கப்படுகின்ற கல்விகளென்பேனோ?
ஞானம் நல் ஆவி என்கோ,Gnaanam nal aavi enko - அர்த்த ஞானத்திற்காரணமான நல்ல சப்தங்கள் என்பேனோ?
கூவும் ஆறு,Koovum aaru - (எம்பெருமானைச்) சொல்லும் விதத்தை
அறியமாட்டேன்,Ariya maatten - அறிகின்றேனில்லை